
திருப்பூரில் இருந்து டவுன் பேருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கருப்புசாமி என்பவர் கண்டக்டராக வேலை பார்த்தார். பேருந்தில் ஏறிய பெண் விஜிவி கார்டன் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் கருப்புசாமி அந்த பெண் கூறிய பகுதியில் பேருந்தை நிறுத்தாமல் அனைப்புதூரில் நிறுத்தியுள்ளார். இதனால் அதே பேருந்தில் இருந்த திருமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் கருப்பு சாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மது போதையில் இருந்த இருவரும் கருப்பு சாமியை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த கருப்புசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ், திருமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.