தமிழகத்தில் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் அமையலாம் என்று கூறப்படுகிறது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசிய நிலையில் அமித்ஷா கூட்டணி உறுதி என்று கூறியுள்ளார். ஆனால் இன்னும் அதிமுக அதனை உறுதிப்படுத்தாத நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க கூடாது என்று கூறி வருகிறார். ஒருவேளை அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால் தான் பதவியை ராஜினாமா கூட செய்வேன் என்று கூறியுள்ளார்.

அதாவது பதவிக்காக திராவிட கட்சிகளிடம் கையேந்தக்கூடாது என்று அண்ணாமலை கௌரவம் பார்க்கிறார். இதனால் அமித்ஷாவை நேரில் சந்தித்து திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று அண்ணாமலை சொன்னதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அண்ணாமலைக்கு ஆதரவு கொடுத்து பரமக்குடியில் ஓட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் வேண்டும் வேண்டும் மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும். வேண்டாம் வேண்டாம் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை கூறுவதால் அவரை பாஜக தலைமை பொறுப்பிலிருந்து தூக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் அந்த பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தான் அண்ணாமலைக்கு ஆதரவு கொடுத்து பாஜக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் இந்த போஸ்டர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.