தமிழக அரசின் நிர்வாகத்திற்குச் சமூகத்தின் மத்தியில் திட்டமிட்டு அவப்பெயரை உண்டாக்குவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோத சக்திகள் சில வேண்டுமென்றே செயற்கையான மின்தடையை ஏற்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மத்தியில் தற்போதைய அரசுக்கு எதிராகத் தவாறான பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஒரு சில இடங்களில் மின்விநியோகக் கட்டமைப்பில் இத்தகைய சதி வேலைகள் அரங்கேற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையில் இதுபோன்ற செயற்கை மின்வெட்டை ஏற்படுத்திய நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகக் காவல்துறையில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறையைச் சுற்றி அடுத்தடுத்து வெடிக்கும் இத்தகைய பரபரப்புப் புகார்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
