உத்தரகாண்ட் மாநிலத்தின் மஸூரி – தேவ்ராதூன் சாலையில் இன்று (மே 18) காலை பட்டா கிராமம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒருவர் காயமடைந்தார். இதில், தேவ்ராதூனிலிருந்து மஸூரிக்குச் சென்றுகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் பாய்ந்தது. இந்த  சம்பவம், அருகிலுள்ள ஒரு ஹோட்டலின் CCTV கேமராவில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

 

 

 

விபத்துக்கு பின்னர், மஸூரி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, இரு வாகனங்களையும் கொலுகீத் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடை முழுமையாக சேதமடைந்த நிலையில், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டுமென்று பலரும் கூறிவருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.