
வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்பாக பீதி அடைய வேண்டாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளைக்காய்ச்சல் பாதிப்பு உடையவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பூசிகள் கிடையாது, காய்ச்சலால் ஏற்படும் நீர் இழப்பினை தவிர்க்க போதிய அளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகை வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக்கூடியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு காய்ச்சல், கழுத்து விரைப்பு, கோமா, பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் ஏற்படும் என தெரிவித்துள்ளது.