தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இதற்கான பணிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இதில் ஐந்து நாட்கள் ஆகியும் வெள்ளநீர் வழியாத இடங்களை வேகமாக சீரமைப்பது மற்றும் நிவாரண நிதியாக குறைந்தது குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொங்கல் தொகுப்புடன் சேர்த்து நிவாரண தொகையை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.