
ப்ரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான முப்பத்தி ஒன்னு புள்ளி ஆறு லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மாசான முத்துவின் வீடும் மழை வெள்ளத்தால் சேதம் ஆகியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க தன்னால் முடிந்த நிதி உதவியை செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.