
ராஜஸ்தானின் லோஹாவத் நகரத்தில் மழைக்குப் பிந்தைய வெள்ளப்பெருக்கால், சாலைகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், நை சதக் பகுதியில் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தபோதும், அதிவேகமாக கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் அதே வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாய் மற்றும் அவரது மகன் திடீரென சாலையில் தவறி விழுந்தனர்.
வாகனத்தின் வேகம் மற்றும் அதனால் ஏற்பட்ட நீர் தெறிப்பு, பைக்கின் சமநிலையை இழக்க வைத்ததாக வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் தாயும் மகனும் பெரிய காயமின்றி உயிர்தப்பினர்.
सड़क पर बाढ़ के पानी में फंसी बाइक, थार वाला आ गया और बिगड़ गया संतुलन, देखिए वायरल वीडियो pic.twitter.com/5GXpab2hlG
— Abhishek Kumar (ABP News) (@pixelsabhi) July 4, 2025
இருப்பினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும், வேக கட்டுப்பாட்டின்றி வாகனம் ஓட்டுவது போன்ற அலட்சியமான செயல், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், மழைக்காலத்தில் சாலைகள் கண்காணிக்க இயலாத வகையிலும் இருக்கும் என்பதால், போக்குவரத்து நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.