தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் முதலில் கடந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் மழை நீர் தேங்காமல் இருந்தது.

இதனை அடுத்து அனைத்து அதிகாரிகளும் விரைவாக செயல்பட்டு தேங்கிய நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. எனவே இன்று காலையில் மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை தொடர்பாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.