கொல்கத்தாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும் உள்ளடக்கப் படைப்பாளருமான தியாஷா கோஸ்வாமி, தான் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாகக் கண்ணீர் விட்டு அழுவதாகத் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் பல லட்சம் ரசிகர்களைக் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாகவும் வண்ணமயமாகவும் வலம் வரும் ஒரு நபர், திரைக்குப் பின்னால் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் தனிமையையும் இந்த வீடியோ அப்பட்டமாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
வெளியே உலகிற்குச் சிரித்த முகத்தைக் காட்டும் பல இணையப் பிரபலங்களின் நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது. தனது அன்றாட வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் கடுமையான மன உளைச்சல், ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் தனிமை ஆகியவை காரணமாகவே இரவில் தனியாக அழுவதாகத் தியாஷா மனமுறிவோடு பகிர்ந்துள்ளார்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது மிகவும் ஆடம்பரமாகவும் வசதியாகவும் தெரியும் இந்த டிஜிட்டல் உலகம், உண்மையில் படைப்பாளிகளுக்கு அதிகளவிலான மன அழுத்தத்தையே பரிசளிக்கிறது என்பதை இவரது வாக்குமூலம் உணர்த்துகிறது.
ரசிகர்களின் கவனத்தையும் ஆதரவையும் தக்கவைத்துக்கொள்ள தினமும் உழைக்க வேண்டிய கட்டாயமும், அதே வேளையில் உருவாகும் ஆன்லைன் வெறுப்புகளுமே பலரைக் மனரீதியாகப் பாதிப்படையச் செய்கின்றன. தியாஷாவின் இந்த உருக்கமானப் பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதில் சோசியல் மீடியா உலகம் என்பது வெறும் மாயை என்றும், அங்கு காட்டப்படும் போலி வெளிச்சங்களை நம்பி யாரும் தங்களை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வெளிப்படையாகத் தனது மனவேதனையைப் பகிர்ந்து கொண்ட தியாஷாவின் தைரியத்தைப் பாராட்டும் அதே வேளையில், இணையப் பிரபலங்களின் மனநலன் குறித்த விழிப்புணர்வும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
See this Instagram video by @tiyashagoswami https://t.co/fGnxg9ebh7
“>
