கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸில் அடுத்த முதல்வர் யார் எனும் கேள்வி எழுந்துள்ளது. கட்சி மேலிடத்து டன் சந்தித்து பேச மூத்தவர் சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். போட்டியாக இருக்கும் DKS இன்னும் டெல்லி செல்லவில்லை. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இன்று எனது பிறந்தநாள் என்பதால் பலரும் வீட்டுக்கு வந்துபோகின்றனர். கோயில் வழிபாடும் உள்ளது. அதனால் டெல்லி செல்வது பற்றி முடிவெடுக்கவில்லை என்று கூறினார்.

135 MLAக்களும் தனது தலைமையில் தான் உள்ளனர் என்ற தொனியில் சித்தராமையா பேசியதற்கு சிவக்குமார் பதிலளித்துள்ளார். அதில், ‘தேர்தல் வெற்றிக்கு தனி மனிதனாக போராடினேன். என் மீது நம்பிக்கை வைத்தே கர்நாடக மக்கள் வாக்களித்தனர். டெல்லி தலைமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. எனது தலைமையில் தான் 135 MLAக்களை வென்றோம்’ என கூறினார். வெளிப்படையாக இருதரப்பு மோதலும் ஆரம்பமாகியுள்ளது.