மதுரை மாவட்டம் உலகநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சமய முத்து – மலர் செல்வி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும் ஐந்து வயதில் கார்த்திகா என்ற ஒரு மகளும் உள்ளனர். சமய முத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சமயமுத்துவின் இளைய மகளான மகள் கார்த்திகா மர்மமான முறையில் மாயமாகியுள்ளார் .இதனால் சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. சிறுமியின் தாய் மலர் செல்வியும் தேடியிருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் மலர் செல்வி தன்னுடைய இளைய மக்களை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் மலர் செவ்வியிடம் விசாரணை நடத்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தன்னுடைய மகளை கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார் தாய் மலர் செல்வி. அதாவது இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை சிறுமி கார்த்திகா பார்த்துள்ளார். இதனால் கார்த்திக வெளியே சொல்லிவிடுவாள் என்று கருதி தன்னுடைய மகளை அங்குள்ள கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும் இதற்கு கள்ளக்காதலன் உடனடியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,.