தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைபுருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் கன்னியாகுமரி குளச்சல் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் மூலம் குழுவில் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த அபிஷ் என்ற இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வாட்ஸ் ஆப் கஞ்சா வியாபாரி என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.