அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும். இதனால் இனி ஓபிஎஸ் தரப்பு அதிமுக கட்சி பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல தரப்பினரும் இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த தற்காலிகமான வெற்றி தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் ஒன்று மட்டும் போதுமா?சின்னமிருந்தால் மட்டும் அவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.