
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சக்கன் அலி மற்றும் ஜாஹித் அலி என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவும் மது குடிப்பதற்காக மதுக்கடைக்கு ஆட்டோவில் சென்றனர். அப்போது ஆட்டோவுக்கு 30 ரூபாய் கட்டணம் யார் கொடுப்பது என்று இருவருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரத்தில் ஜாஹித் சக்கன் அலியை கீழே தள்ளினார். அப்போது அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஜாஹித்தை தேடி வந்தனர். அப்போது அவர் ரயில்வே ஸ்டேஷனில் பதுங்கி இருப்பது தெரிய வந்த நிலையில் அங்கு சென்று காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.