நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதிக வட்டி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் முதலீடு செய்யும் நிலையில் அதிகபட்சத்திற்கு வரம்பு கிடையாது. இந்த திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.8% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் கிடைக்கும்.

இந்த திட்டத்தில்‌ மாதம் ரூ.100 முதலீடு செய்தால் 5 வருடங்களில் ரூ‌.6000 இருக்கும் பட்சத்தில், பொது முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ‌.7099-ம், மூத்த குடிமக்களுக்கு ரூ.7,193-ம் கிடைக்கும். மேலும் அதே நேரத்தில் ரூ.10,000 முதலீடு செய்தால் 5 வருடத்தில் முதலீட்டு தொகை ரூ.6 லட்சமாக இருக்கும் என்பதால் முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து பொது வாடிக்கையாளர்களுக்கு ரூ.7.09 லட்சமும், மூத்த குடிமக்களுக்கு ரூ‌.7.19 லட்சமும் கிடைக்கும். இந்த RD கணக்கில் தேவைப்பட்டால் நீங்கள் 90% வரை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். ஒருவேளை முன்னதாகவே பணத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் அதற்கு சிறிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.