உலகம் முழுவதிலும் வெறுப்பு ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் “கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெறுப்பு உணர்வும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு தெளிவான செய்தியை கூற விரும்புகிறேன்.

வெறுப்புக்கு இந்த உலகில் இடம் இல்லை. வெறுப்பான குற்றங்கள் காயங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவநம்பிக்கையையும் வன்முறையையும் தூண்டுகின்றது. இதன் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. அனைவரும் பிறப்பு அடிப்படையில் சமமான சுதந்திரம் மற்றும் உரிமை பெற்றவர்கள். ஆகவே வெறுப்புணர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்” என தெரிவித்துள்ளார்.