
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ராயன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக தன்னுடைய 51வது படமான குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கும் நிலையில் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகர் தனுஷின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.