பிரபல நடிகரான ஜெயம் ரவி ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வடித்தது. இது ஜெயம் ரவி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொளி மூலம் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
