நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் சுட்டெரித்த போது மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது ஓரளவு வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கோடை காலத்தில் வாட்டி வதைத்த வெப்ப அலை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்தில் பலத்த மழை பெய்யும். இன்று மும்பை மாநகர் முழுவதும் மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம் தமிழகத்திலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.