
வெட்டுக்கிளி, பட்டுப்புழு உள்ளிட்ட 16 பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் உணவுக் கழகம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2022 முதல் கருத்து கேட்பு, கலந்தாலோசனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை கவரவும் இந்த பூச்சிகள் உணவு மெனுக்கள் உதவும் என்று ஹோட்டல்கள், கபேக்கள் தெரிவித்துள்ளன.
சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பூச்சிகளை இறக்குமதி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆஸி., நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஊட்டச்சத்து தேவைக்காக பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.