வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில், சுமார் 700 கிலோ எடையுள்ள எருமை மாடு ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தலைமுடி பொன்னிறமாகவும், முக அமைப்பு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போலவே இருப்பதால், உரிமையாளர் செல்லமாக இதற்கு ‘டொனால்ட் டிரம்ப்’ என்று பெயரிட்டுள்ளார்.
இந்த விசித்திரமான எருமை மாட்டைப் பார்ப்பதற்கும், அதனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதுவதுடன், இணையதளங்களில் இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த எருமை மாடு மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது; இதற்கு தினமும் நான்கு முறை குளியல் அளிப்பதோடு, அதன் தலைமுடியை சீவுவதற்கு பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற சீப்பு பயன்படுத்தப்படுகிறது.
Poor thing!
Bangladeshi buffalo upset by comparisons to Donald Trump😐
RT: A Bangladeshi buffalo that resembles Trump has lost its appetite after people flocked to see him. pic.twitter.com/6BnayVaJrY
— Iran in Russia (@IranembinRussia) May 22, 2026
“>
இந்த எருமையின் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, சாதாரண மக்கள் மட்டுமன்றி, ஈரான் நாடும் இது குறித்து நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து சமூக வலைதளங்களில் கேலி செய்துள்ளது. ஈத் பண்டிகையை முன்னிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த ‘டொனால்ட் டிரம்ப்’ எருமை மாடு தற்போது உலக அளவில் வைரல் நட்சத்திரமாக மாறியுள்ளது.
