ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. அதாவது எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதனை ஒரு பருத்தி நூலில் கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மெதுவாக பருத்தி நூலின் வழியாக மிளகாய் உடன் சேர்ந்து ஆவி ஆகின்றது. இவ்வாறு வெளியேறும் இந்த வாசனை காற்றில் கலப்பதால் நம்முடைய சுவாச ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை அளிக்கிறது. இந்த வாசனை காற்றில் பரவுவதன் மூலமாக புத்துணர்வு கிடைக்கும்.

அதே சமயம் எலுமிச்சை மற்றும் மிளகாயிலிருந்து வெளியேறும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள் மற்றும் கிருமிகள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். இதன் மூலமாக உண்டாகும் நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுவாக எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை இருப்பதால் அதனை வீட்டு வாசலில் கட்டி வைத்தால் நம்மை நோக்கி நல்ல சக்திகளை ஈர்க்க இது உதவும் எனக் கூறப்படுகிறது. இதுதான் வீட்டு வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவதற்கான உண்மை நோக்கம். மத பேதமின்றி அனைவருமே இதனை பயன்படுத்தலாம்.