
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் சரோஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருக்கிறார். இந்த வீட்டின் உரிமையாளருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர்களின் மகள் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் சரோஜ்குமார் உரிமையாளரின் மனைவி மற்றும் மகளை அவர்களுக்கே தெரியாமல் ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்து மிரட்டி வந்தார். அவர் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருவரையும் பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். அவரின் தொல்லையை பொறுக்க முடியாத வீட்டு உரிமையாளரின் மனைவி காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சரோஜ்குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.