துபாய் என்றதுமே நம் நினைவுக்கு வருவது வானளாவிய கட்டிடங்களும், மின்னும் மின்விளக்குகளும், சொகுசு வாழ்க்கையும்தான். ஆனால், அந்தப் பளபளப்பான வெளிச்சத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான இருண்ட பக்கத்தை இந்திய வாலிபர் ஒருவர் வெறும் 2 நிமிட வீடியோவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் சம்பாதித்து வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாகி விடலாம் என்ற கனவோடு செல்லும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிஜமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்த வீடியோ மிகத் துல்லியமாகப் தோலுரித்துக் காட்டியுள்ளது.
வேலைக்காக துபாய் செல்லும் பலர் அங்கு எதிர்கொள்ளும் கடினமான உழைப்பு, சொற்பமான ஊதியம், மற்றும் தங்குவதற்குக் கூட முறையான வசதிகள் இல்லாத அவல நிலை ஆகியவை குறித்து அந்த வாலிபர் வேதனையுடன் பேசியுள்ளார்.
நாம் சோஷியல் மீடியாவில் பார்க்கும் துபாயின் ஆடம்பர வாழ்க்கை என்பது சில பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்றும், சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கை தினமும் பசி, தூக்கமின்மை, மற்றும் மன உளைச்சலுடன்தான் கடந்து போகிறது என்றும் அவர் அந்த வீடியோவில் விவரித்துள்ளார். கூலி வேலை மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு வருபவர்கள் சந்திக்கும் இந்தச் சுரண்டல்கள் பலருக்கு வெளியுலகிற்குத் தெரிவதே இல்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
மேலும் சொந்த ஊரையும், குடும்பத்தையும் பிரிந்து வெளிநாட்டில் படும் இந்த அவஸ்தைகளை வெளியில் சொல்ல முடியாமல் பலர் தவித்து வருவதாகவும், ஏஜென்டுகளின் போலியான வார்த்தைகளை நம்பி ஏமாந்து வர வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, துபாய் வாழ்க்கையின் நிஜப் பக்கத்தைப் படம் பிடித்துக் காட்டி பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
See this Instagram video by @lj290497 https://t.co/445NeiEfVo
“>
