திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கொத்தூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது திடிரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி வீட்டிற்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கரடி இளம்பெண்ணை தாக்கியதால் இளம்பெண்னுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதற்கிடையே அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கரடி அங்கிருந்து விரட்டி அடித்து இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அந்த கரடியை பிடிப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.