கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் ரெஜி என்ற 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரசோபா (46) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று இவர்களது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்த போது பிரசோபா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதன் பிறகு படுக்கையறையில் ரெஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
