பொதுவாகவே வீடுகளில் பல இடங்களில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு பகுதியில் அசுத்தமாக இருப்பது தான். இது போன்ற உயிரினங்கள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பல தீங்கு விளைவிக்கின்றன. அதன்படி வீட்டில் இந்த உயிரினங்கள் அடிக்கடி இருந்தால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அதனை எளிதில் விரட்டி அடித்து விடலாம்.

பல்லியை விரட்டுவதற்கு நாப்தலின் பந்துகளை வீட்டில் பயன்படுத்தலாம். இதன் மூலமாக வீட்டில் உள்ள பல்லிகளை எளிதில் விரட்டி அடிக்க முடியும்.

பூண்டு சாற்றை நீரில் கலந்து பல்லி மற்றும் பூச்சிகள் வரும் இடத்தில் அடிக்கடி தெளித்தால் இந்த வாசனைக்கு அவை வராது.

எந்த இடத்தில் இருந்து வீட்டுக்கு பல்லி வருகிறதோ அந்த இடத்தில் கிராம்பை கட்டி தொங்க விட்டால் பல்லி அப்படியே ஓடிவிடும்.

வெங்காயச் சாற்றை எடுத்து தெளித்தால் அதற்கும் அவை ஓடிவிடும். வெங்காயத்தின் வாசனை அதற்கு அறவே பிடிக்காது என்பதால் வீட்டிற்குள் அது நுழையாது.