
கேரள மாநிலம் திருச்சூர் பெருஞ்சனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(42). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்பு அந்த பெண்ணிடம் அறிவாளை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்களிடமும் அறிவாளை காட்டி மிரட்டிய மனோஜ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மனோஜை கைது செய்தனர்.
பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போது மனோஜ் மீது ஏற்கனவே திருட்டு வழிப்பறி பாலியல் போன்ற பல வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.