சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பாரத் நகர் பகுதியில் சங்கர் (44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான போரூர் அடுத்த சேக்மான்யம், அலங்கார் தெருவில் உள்ள வீட்டில் 35 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் சங்கர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்ட நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே சங்கர் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்த இளம் பெண்ணை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் அந்த இளம் பெண் புகார் அளித்த நிலையில் போலீசார் ஷங்கரை கைது செய்து அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.