PF சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் பணம் வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும்.

இணையதள வசதி:

EPFO என்ற இணையதளத்தில் e-passbook ஆப்ஷனை கிளிக் செய்து UAN மற்றும் password பயன்படுத்தி உங்களுக்கு PF பணம் வந்துவிட்டதா என்பதை எளிதில் பார்த்துவிடலாம்.

எஸ்எம்எஸ்:

PF கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் நம்பரிலிருந்து “EPFOHO UAN TAM” என டைப் செய்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தமிழிலேயே உங்கள் பணம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். வெறும் “EPFOHO UAN”என அனுப்பினால் ஆங்கிலத்தில் விவரங்கள் வரும்.

உமாங் செயலி:

இந்த செயலியில் உள்ள employee-centric services ஆப்ஷனை கிளிக் செய்து, பின்னர் view passbook ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களது UAN மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி PF பணம் வந்துவிட்டதா என்பதை எளிதில் பார்த்துவிட முடியும்.

மிஸ்டு கால்:

PF கணக்கொடு இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் நம்பரிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் உங்கள் PF கணக்கில் இருக்கும் பணம், கடைசியாக வந்த பணம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வந்துவிடும்.