தமிழகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை உயிரினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது வீடுகளில் இந்த உயிரினங்களை வளர்த்தல் மற்றும் இனப்பெருக்கம் செய்தலில் ஈடுபடுவோர் அது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களை முதன்மை தலைமை வன பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர், முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகம் கிண்டி வேளச்சேரி பிரதான சாலை கன்னிகாபுரம் செக்போஸ்ட் அருகில் சென்னை 600032 என்ற முகவரிக்கு இன்று ஜூலை 24ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24329137 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.