செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் கார்த்திக் விவாகரத்து செய்ய முடிவு எடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதில் ஷோபாவுக்கு உடன்பாடு இல்லாததால் தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இருப்பினும் பேச்சு வார்த்தைக்கு கார்த்திக் உடன்படாமல் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்றும் கார்த்திக் வீட்டுக்கு சென்று ஷோபா பேசியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையில் பலனளிக்காததால் தன்னுடைய ஸ்கூட்டரில் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது வேளச்சேரி விஜயநகர் இரண்டடுக்கு புதிய மேம்பாலத்தில் ஸ்கூட்டியை நிறுத்தினார். அதன் பிறகு ஹெல்மெட் மற்றும் செருப்பு ஆகியவற்றை கழற்றிவிட்டு மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷோபாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்