இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக அவர்கள் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை எளிதில் வாங்க பி எம் கிஷான் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதனைப் போலவே மின்சாரம் மற்றும் எரிபொருட்களை பெறுவதற்கு பிஎம் குசும் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியத் தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் சோலார் பம்புகளை அமைக்க 45 சதவீதம் மானியத்தை மானிய தொகையாக பெற முடியும். இதனை பெறுவதற்கு விவசாயிகளுக்கு நான்கு முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் இருக்க வேண்டும். இந்த நிலத்தில் ஒரு ஆண்டில் 15 யூனிட் மின்சாரம் செய்வதற்கான வசதிகளை அரசு வழங்கும். இந்த மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலமாக விவசாயிகள் நல்ல லாபத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளது.