பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் நிலையில், இதுவரை 16 தவணைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுக்கான உதவித்தொகைரூ.2000 ஜூன் இறுதிக்குள் அல்லது ஜூலை முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 17ஆவது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 17ஆவது தவணை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.