இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் இதுவரை மொத்தம் 15 தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பி எம் கிசான் திட்டத்தின் 16-வது தவணை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 15ஆவது தவணை பணத்தை பெறாதவர்கள் 156261 மற்றும் 1800115526 என்ற புகார் எண்ணில் தங்கள் பதிவுகளை புகார் செய்யலாம். கேஒய்சி சரிபார்ப்புகளை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை முடிக்காத விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று அதற்கான வழிமுறைகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.