நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 14வது தவணை பணத்தை செலுத்த மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 13ஆவதுதவணைகளில் 26 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 14வது தவணைத் தொகையை கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.