
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள விவசாயிகளிடம், இளம்பெண் ஒருவர் முந்திரி பருப்பு கொள்முதல் செய்வதாக சொல்லி அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின்னர், தலைமறைவாக இருந்த அந்த பெண் சொந்த ஊருக்கு வந்திருப்பதை அறிந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள், சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று அந்த பெண்ணை பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.