கன்னியாகுமரியில் நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறு குழந்தையின் கால் நாற்காலியின் துளைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.
குழந்தையின் காலால் நாற்காலியில் இருந்து வெளியில் எடுக்க முடியாததால், பெற்றோர் பதற்றமடைந்தனர். இதையடுத்து, உடனடியாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சிறப்புச் சாதனங்களைக் கொண்டு மிகவும் லாவகமாகச் செயல்பட்டு, குழந்தைக்கு எவ்விதக் காயமும் ஏற்படாத வகையில், சிக்கியிருந்த காலைப் பாதுகாப்பாக மீட்டனர். தீயணைப்புத் துறையினரின் விரைவான செயல்பாட்டிற்குப் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி: நாற்காலியில் சிக்கிக்கொண்ட குழந்தையின் கால். தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.#Kanniyakumari | #Child | #Chair | #FireFighters pic.twitter.com/Js56HBueVx
— PttvOnlinenews (@PttvNewsX) October 29, 2025
“>
