
ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின் வயர் ஒன்றை தொட்ட நிலையில் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது சிறுமியுடன் விளையாடி கொண்டு இருந்த அவரது வீட்டு பணியாள் ஒருவரும் இந்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் உயரமான கட்டிடங்களில் வாழும் அக்கம் பக்கத்தினருக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.