நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில்லறை பண வீக்கம் அதிகரித்த நிலையில் விலைவாசி உயர்வால் இதுவரை இல்லாததை விட பணவீக்கம் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசின் கையிருப்பில் இருந்து ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் டன் கோதுமை மற்றும் அரிசியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையை கூட்டுறவு கடைகள் மூலமாக விற்பனை செய்து விலையை குறைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,உணவுப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை கருதி அந்த பொருள்களை இறக்குமதி செய்வதற்கான மத்திய அரசின் முயற்சிகளை விரைவு படுத்த வேண்டும். மத்திய இருப்பிலிருந்து ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் டன் கோதுமை மற்றும் அரிசி பருப்புகளை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு மாதம் ஒன்றுக்கு தலா பத்தாயிரம் டன் கோதுமை மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் இந்த பொருள்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.