நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.  கடும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கடும் வெயிலை  சமாளிப்பதற்கு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது விலங்குகளுக்கு ஐஸ்கிரீம், பழச்சாறுகள் வழங்கப்பட உள்ளதாக பூங்கா இயக்குனர் சஞ்சித் சிங் தகவல் தெரிவித்துள்ளார் .மேலும் ஏர்கூலர் பொறுத்தியும், அவ்வப்போது விலங்குகள் மீது தண்ணீர் தெளித்தும் பாதுகாக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.