
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ். இவர் நேற்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சுனில் கவாஸ்கருக்கு தற்போது 75 வயது ஆகிறது.
இவர்தான் என்னுடைய ரோல் மாடல் என்று சச்சின் டெண்டுல்கர் பலமுறை கூறியது போன்று அவரை ரோல் மாடலாக வைத்து தான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற மகத்தான வீரர்களை இந்தியா உருவாக்கி வருகிறது. அவர் பேட்டிங் செய்வதை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். மேலும் அவர்தான் உண்மையான இந்தியாவின் பேட்டிங் டான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.