இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக திகழ்கிறார். இந்நிலையில் விராட் கோலியை விமர்சித்தபோது தனக்கு அவருடைய ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விராட் கோலி கிரிக்கெட்டில் மிகவும் வல்லவராக இருக்கிறார். போட்டியில் தாம் ஆட்டம் இழந்து விடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார்.

விராட் கோலி குறித்து நான் ஆயிரம் விஷயங்களை பாராட்டியுள்ளேன். இருப்பினும் அவர் செய்யும் ஒரு சிறிய தவறை நான் ஆதங்கத்தில் சுட்டிக்காட்டினால் அதற்காக அவருடைய ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்தார்கள். அவர் செய்யும் சிறு தவறை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி சொல்கிறேன். நான் எப்போதுமே தனிப்பட்ட முறையில் விராட் கோலியை விமர்சித்ததில்லை. நான் அவரை பலமுறை நேர்காணலில் சந்தித்து நல்ல முறையில் பேசியுள்ளேன். மேலும் விராட் கோலி மட்டுமின்றி பாபர் அசாம் குறித்தும் இதே விமர்சனத்தை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.