உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் வணிகர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்வதற்கு வருடத்திற்கு 1.50 கோடிக்கு மிகாமல் வருமானம் இருக்க வேண்டும். வணிகர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். மேலும் இந்த திட்டத்தை பெற வணிகர்கள் ஒவ்வொரு மதமும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய வணிகர்கள் மட்டும் இணைய முடியும். 50, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் 200 ரூபாயை பக்கத்தில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்து இந்த ஓய்வூதியத்தை  பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வணிகர்கள் பொது வசதி மையத்திலிருந்து ஆதார் மற்றும் வங்கி பாஸ்புக் மூலம் சரிபார்பை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.