மிக கம்மியான விலையில் விமான பயணம் செய்யும் சிறப்பு திட்டத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மக்களுக்கு விமான பயணம் என்பது மிகப்பெரிய கனவாகும். அதற்காக காரணம் விமான டிக்கெட் விலை மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் நிறைய பேர் ரயில் மற்றும் பேருந்தில் தான் பயணம் செய்கிறார்கள். அப்படி விமான பயணம் செய்ய வேண்டுமென்ற கனவில் யாராவது இருந்தால் அதை நினைவாக்க இப்பொழுது நல்ல வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. அதன்படி ஏர் இந்தியா குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

எக்ஸ்பிரஸ் என்பது ஏர்  இந்தியாவின் குறைந்த கட்டண சேவை வழங்கும் துணை நிறுவனம். இது குறைந்த விலையில் எக்ஸ்பிரஸ் லைட் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அதன்படி பயணிகள் ஏழு கிலோ கேபின் பேக்கேஜுடன் மட்டுமே பயணிக்க முடியும். கேபின் பேக்கேஜுடன் பயணிக்கும் போது செக்கிங் கவுண்டருக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. லக்கேஜ் நேரடியாக விமானத்தில் எடுத்துச் செல்லலாம்.