
பொதுவாக விமானத்தில் செல்லும்போது சில பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அதாவது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுகிறது. அதன்படி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் தென்னிந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தேங்காய்க்கும் அனுமதி கிடையாது. இதனை விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது.
இதற்கான காரணம் குறித்து தற்போது பார்ப்போம். அதாவது தேங்காயிலிருந்து பொதுவாக தேங்காய் எண்ணெய் எடுப்பார்கள். இது ஒரு எண்ணெய் பொருளாக வகைப்படுத்தப்படுகிறது. இதில் எண்ணெய் என்பது தீப்பற்றக்கூடிய பொருள். இதன் காரணமாகத்தான் பாதுகாப்பு கருதி தேங்காயை கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. மேலும் சமீபத்தில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் துபாய்க்கு மட்டும் மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.