நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனின் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்த போதும் இந்திய சினிமாவில் முக்கியமான படமாக மாறிய ராக்கெட்ரி ஆஸ்கர் விருதுக்கான பட்டியலிலும் இடம் பிடித்தது. இது தொடர்பாக நடிகர் மாதவன் தனது இணைய பக்கத்தில், “அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் 2023-ராக்கெட்ரி நம்பி எபெக்ட் படம் சார்ட்லிஸ்ட் ஆகியுள்ளது. இது கடவுளுக்கே பெருமை. பார்ப்போம்” என பதிவிட்டுள்ளார்.