ஆலயங்களில் விபூதி வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி இந்த பதிவில்  பார்க்கலாம்.

விபூதியை சைவ சமயத்தை சார்ந்தவர்கள் நெற்றியில் இட்டுக் கொள்வது வழக்கம். நெற்றியில் விபூதி இடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஒருவர் விபூதியை அணிய சில விதிமுறைகள் உள்ளது.

ஆலயங்களில் விபூதியை பிரசாதமாக பெறும் போது ஒரு கையை மட்டும் நீட்டி வாங்காமல் இடக்கையின் மேல் வலது கையை வைத்து வாங்க வேண்டும்.

காலை மாலை என கோயிலுக்கு செல்லும்போதும் இரவு உறங்கும் முன்பும் விபூதியை போட்டுக் கொள்ளலாம்.

வலது கையில் வாங்கும் விபூதியை இடக்கையில் கொட்டி அதிலிருந்து எடுத்து நெற்றியில் போடக்கூடாது. கையில் இருக்கும் விபூதியை ஏதேனும் தூணில் தட்டி விட்டு அதன் பிறகு எடுத்து போட்டுக் கொள்ளலாம்.

விபூதியை பெறும் போது “திருச்சிற்றம்பலம்” என்றும் நெற்றியில் இடும்போது “பஞ்சாட்சர” மந்திரத்தையும் ஜெபிக்க வேண்டும்.

வயதில் சிறியவர்கள் கையில் இருந்து விபூதியை எடுத்து நெற்றியில் இடாமல் நமது கையில் விபூதியை வாங்கி விட்டு அதன் பிறகு போட்டுக் கொள்ளலாம்.

கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து நின்று கொண்டு தான் விபூதி போட வேண்டும்.

சிவனடியார் ஆச்சாரியார் ஆகியோரிடம் இருந்து விபூதியை வாங்கும் போது அவர்களை வணங்கிவிட்டு பெற வேண்டும்.

நெற்றியில் திருநீறு அணிவதன் மூலம் மனதில் இறைபக்தி அதிகரித்து தீய எண்ணங்கள் விலகிவிடும்.