திருநெல்வேலி மாவட்ட த்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் தான் நெல்லையப்பர் திருக்கோவில். இந்த கோவிலில் அம்பாளுக்கும் சிவபெருமானுக்கும் தனித்தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானையும் அம்பாளையும் வெவ்வேராக பார்க்காமல் இருவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் விதமாக பிரதோஷ நாட்களில் அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜைகள் செய்யப்படுகின்றது.

அதேபோன்று சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு மட்டுமல்லாது அம்பிகைக்கும் சேர்த்து அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படும். இதன் மூலம் இத்திருத்தலத்தில் அம்பாளையும் சிவபெருமானையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பதை உணரலாம். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை நிலைநாட்டு விதமாகவே இந்த நெல்லையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கணவன் மனைவி இருவர் சேர்ந்து வழிப்பட்டால் அவர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் குறைவதோடு ஒற்றுமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.